Categories
பல்சுவை

செடிகளில் இருக்கும் களைகளை அழிக்க…. இதை செஞ்சி பாருங்க…. செடிகள் செழிப்பா வளரும்…!!!!!

பொதுவாக நம்முடைய வீட்டில் செடிகள் வைக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும்., பழம், காய்கறிகள் ஆகியவை வீட்டு தோட்டத்தில் இருந்து நாம் பயன்படுத்தினால் அது மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால் நாம் வளர்க்கும் செடிகளுக்கு அருகில் காட்டுச் செடிகள் வளர்வதால் அதில் உள்ள சத்துக்களை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும். அதுமட்டுமின்றி நாம் வளர்க்கும் செடிகளுக்கு போடும் உரங்களையும் ஊட்டச்சத்துக்களையும் காட்டுச் செடிகள் எடுத்துக் கொண்டு நன்கு செழிப்பாக வளரும்.

இந்த காட்டுச் செடிகளை எவ்வாறு அளிப்பது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் வினிகர் ,பாத்திரம் தேய்க்க கூடிய திரவம், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து திரவம் போல் ஆகும் வரை நன்கு கலக்க வேண்டும். பின்னர் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி காட்டுச் செடிகள் முளைத்து இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். காட்டு செடிகள் இல்லாவிட்டாலும் நீங்கள் வளர்க்கும் செடிகளுக்கு அருகில் திரவத்தை தெளிக்கவேண்டும். இப்படி தெளித்து வருவதினால் காட்டுச் செடிகள் வளராமல் தடுக்க முடியும்.

இது கெமிக்கல் திரவத்தை போன்று உடனடியாக செயல்படாது. தொடர்ந்து பல நாட்கள் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு கப் கல் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலக்கி காட்டுச் செடிகள் முளைத்த இடங்களில் தெளித்து வந்தால் அது முற்றிலுமாக அழிந்துவிடும். செடிகள் முளைக்கும் இடத்தில் காட்டு செடிகள் முளைக்கக் கூடாது என்று நினைக்கக்கூடிய இடங்களிலும் தெளிக்கலாம்.

Categories

Tech |