Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று…. அதிர்ச்சியில் மக்கள்….!!

நேற்று முன்தினம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரபல நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

சீன நாட்டில் உகான் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தான் கொரோனா தொற்று முதல் முதலாக கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி, வரலாறு காணாத பாதிப்புகளை இந்த தொற்று ஏற்படுத்தியுள்ளது. தற்போது தடுப்பூசி உள்ளிட்ட காரணங்களால் மட்டுமே உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால் சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து  அதிகரித்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம்  1,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகின்றன.

இதனை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொற்று உறுதியானவர்களில் 193 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. மேலும் 990 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்றும் சீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சீனாவில் இதுவரை கொரோனா அறிகுறிகளோடு உறுதி செய்யப்பட்ட தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 2,22,775 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும்  இதுவரை இங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையாவது  5,218 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |