சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை கிலோ ரூ.120 ஆக அதிகரித்துள்ளது. சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் சென்னையில் தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
தொடர் மழை பொழிவு, வரத்து குறைவு ஆகிய காரணங்களால் இந்த மாதம் தொடக்கம் முதலே தக்காளி விலை அதிகரித்து வந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.