Categories
உலக செய்திகள்

இலங்கை: “உணவுக்காக போராடும் நிலைமை வரும்”…. பீதியில் மக்கள்…..!!!!!

இலங்கை நாட்டில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபயராஜபக்சே குடும்பம்தான் காரணம் எனகூறி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து நெருக்கடி முற்றி பிரதமராகயிருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பிரதமர் ரணில் நேற்றுமுன்தினம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியதாவது “உலகளாவிய உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் அந்நாடு உணவுக்காக போராடும் ஒரு சூழ்நிலை வரும் என எச்சரித்தார்.

மேலும் அவர் கூறியதாவது இந்த வருடத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிற உலகளவிலான உணவுப்பொருள் தட்டுப்பாட்டில் உணவு இல்லாநிலைக்கு தள்ளப்படும் ஒருசில நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருக்கும். போதுமான உணவு இன்றி போகும் நாடுகள் என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு பட்டியலிட்டுள்ள நாடுகளில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. கொழும்பு நகரம் உட்பட அனைத்து இடங்களிலும் கைவிடப்பட்ட நிலத்தில் மக்கள் உணவு தானியங்களைப் பயிரிட வேண்டும். ரயில்வேக்கு சொந்தமான பல்வேறு நிலங்கள் கைவிடப்பட்டுள்ளது. அதை உணவு தானியங்கள் சாகுபடிக்கு பயன்படுத்த முடியும்.

வரும் 2023-ஆம் ஆண்டை விவசாய ஆண்டாக ஆக்க வேண்டியது இலங்கையின் அத்தியாவசிய தேவையாகி உள்ளது” என்று அவர்  கூறினார். கொரோனா தொற்று, உக்ரைன் போர் என அடுத்தடுத்த உலகளாவிய பிரச்சினைகள் உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆகவே அந்நாட்டில் உணவுக்கு போராடும் சூழ்நிலை வரும் என பிரதமர் அறிவித்து இருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |