அட்டகத்தி, மெட்ராஸ் படங்கள் வாயிலாக கவனம்ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக பா.இரஞ்சித் உயர்ந்தார். இறுதியாக அவரது இயக்கத்தில் வெளியாகிய சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்போது காளிதாஸ் ஜெயராம், அசோக்செல்வன், துஷரா விஜயன் போன்றோர் நடிப்பில் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற திரைப்படத்தை ரஞ்சித் இயக்கி முடித்து உள்ளார். இதையடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் சியான் 61 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையில் இயக்குனர் பா.இரஞ்சித் “வேட்டுவம்” என்ற புது திரைப்படத்தை எழுதி இயக்கயிருக்கிறார். இந்த திரைப்படத்தை கோல்டன் ரேஷியோபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உலகபுகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த போஸ்டர் இப்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.