இளஞ்சிவப்பு நிற மழை பெய்யும் என பிரபல நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சில இடங்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் மழை பெய்து வருகின்றது. இந்த மழையினால் இடி மின்னல் மற்றும் கன மழையும், பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இரத்த மழையானது அதிக அளவில் சிவப்பு நிற தூசு மற்றும் துகள்கள் மழை நீருடன் கலக்கும்போது உருவாகுவதாகும். எனவே மழை பெய்யும்போது சிவப்பு நிறத்தில் நீர்த்துளிகள் விழுவதைக் காண முடிகிறது.
இதனை அடுத்து லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என நேற்று காலை வரை மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் மக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக மக்கள் கடும் வெயிலில் தவித்து கொண்டிருந்த போது திடீரென வானிலை மாறி மழை பொழியும் நிலை உருவாகியிருப்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.