Categories
மாநில செய்திகள்

“எக்ஸ்பிரஸ் ரயில் சேவை”…. பயணிகளுக்கு வெளியான திடீர் அறிவிப்பு…..!!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்இருப்பதாவது “பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

# நெல்லூர்-சூலூர்பேட்டை இடையில் காலை 10:15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையில் காலை 7:50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையில் காலை 5:20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையில் மதியம் 12:35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையில் காலை 4:25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

# திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) இடையில்  காலை 10:10 மணிக்கும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி (16053) இடையில் மதியம் 2:15 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 24, 25, 31ஆம் தேதி, ஜூன் மாதம் 1, 7, 8ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

# விஜயவாடா-சென்டிரல் (12711) இடையில் காலை 6:10 மணிக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24ஆம் தேதி கூடூர்-சென்டிரல் இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதன்பின் மறுமார்க்கமாக சென்டிரல்-விஜயவாடா (12712) இடையில் மதியம் 2:10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24ஆம் தேதி சென்டிரல்-கூடூர் இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4:20 மணிக்கு இயக்கப்படும்.

பல்லவன்

# காரைக்குடி-எழும்பூர் (12606) இடையில் அதிகாலை 5:30 மணிக்கு இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூன் மாதம் 1- ஆம் தேதி செங்கல்பட்டு-எழும்பூர் இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

# எழும்பூர்-மதுரை (12635) இடையில் மதியம் 1:50 மணிக்கு புறப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் வரும் ஜூன்மாதம் 1 ஆம் தேதி எழும்பூர்-செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டில் இருந்து மதியம் 2:50 மணிக்கு இயக்கப்படும்.

# பெங்களூரு-சென்டிரல் (12608) இடையில் காலை 6:20 மணிக்கு இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவை-சென்டிரல் (12680) இடையில் காலை 6:15 மணிக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூரு-சென்டிரல் (12610) இடையில் அதிகாலை 5:00 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் 24, 25, 31ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8ஆம் தேதிகளில் காட்பாடி-சென்டிரல் இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்டர்சிட்டி

# சென்டிரல்-பெங்களூரு (12607) இடையில் மதியம் 3:30 மணிக்கு புறப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24, 25, 31 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8 ஆம் தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து மாலை 5:35 மணிக்கு இயக்கப்படும்.

# சென்டிரல்-மைசூரு (12609) இடையில் மதியம் 1:35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24, 25, 31 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8 ஆம் தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியிலிருந்து மதியம் 3:45 மணிக்கு இயக்கப்படும்.

# சென்டிரல்-கோவை (12679) இடையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 24, 25, 31 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8 ம் தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியிலிருந்து மாலை 4:20 மணிக்கு இயக்கப்படும்.

# சென்டிரல்-சாய்நகர் சீரடி (22601) இடையில் காலை 10:20 மணிக்கு இயக்கப்பட்டு வருகிற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 25ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 8 ஆம் தேதிகளில் 2 மணி 25 நிமிடம் தாமதமாக மதியம் 12:45 மணிக்கு புறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |