எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட பெண் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் ஜோதி நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவருடைய மனைவி என்ஜினியரான 23 வயதுடைய சில்வன மேரி. இவர் சென்னையில் இருக்கின்ற ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருக்கிறது. அதனால் எலிகளைக் கொல்வதற்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்துள்ளார்கள்.
இது தெரியாமல் சில்வன மேரி அந்த உணவை எடுத்து சாப்பிட்டு விட்டார். இதனால் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை பாடியநல்லூர் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சில்வன மேரி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து செங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.