Categories
அரசியல்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மே 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நிறமுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பணம் கிடைக்கும்.

இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி இதற்கு முன்பு மார்ச் 22ஆம் தேதி eKYC முடிப்பதற்கான கடைசி தேதி என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து மே 22ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் pm-kisan திட்டத்தின் பலன்களை பெறுவதற்கு eKYC முடிவதற்கான கடைசி தேதியை வருகின்ற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைனில் eKYC முடிப்பது எப்படி?

* முதலில் ஆன்லைனில் eKYC முடிக்க https://pmkisan.gov.in/ இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

* அதில் உள்ள Farmers Corner பிரிவில் eKYC தேர்வு செய்யவும்.

*அதில் ஆஹ்டார் எண் பதிவிட்டு Search பட்டனை கிளிக் செய்யவும்.

* இப்போது மொபைல் எண் பதிவிட்டு OTP பெறவும்.

* OTP பதிவிட்டு Submit கொடுக்கவும்.

* இத்துடன் உங்கள் eKYC முடிந்துவிடும்.

Categories

Tech |