Categories
மாநில செய்திகள்

தனது மனைவிக்கு பதிலாக வேறு ஒருவரின் மனைவியை…. வியாபாரி வெறிச்செயல்…. திருவண்ணாமலையில் பயங்கரம்….!!!

திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலைக் கல்லூரி அருகில் உள்ள இந்திராநகர் பகுதியில் தேவேந்திரன்(55) என்பவர் வசித்துவருகிறார். இவர் மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்து விட்டதால் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேந்திரன் தனலட்சுமிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தனலட்சுமி ஆம்பூருக்கு வந்து தங்கியிருந்தார். இதனையடுத்து தேவேந்திரனின் மனைவி தனலட்சுமி ஆம்பூரில் உள்ள கடைகளின் முன் இரவில் உறங்குகிறார் என்று அவருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு ஆம்பூர் வந்த தேவேந்திரன் இருட்டில் அடையாளம் தெரியாமல் தன்னுடைய மனைவி தனலட்சுமி என்று நினைத்து மற்றொரு பெண்ணின் கழுத்து மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். இதனால் அந்த பெண் அலறிய போதுதான் குத்தியது மனைவி அல்ல வேறு ஒருவரின் மனைவி என்று தேவேந்திரனுக்கு தெரிந்தது. அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் தேவேந்திரனை பிடித்து அடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது தேவேந்திரன் குத்திய வேறொரு பெண் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். மேலும் படுகாயமடைந்த தனலட்சுமியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |