Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 1/2கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று… கிணற்றில் தண்ணீர் எடுக்கும் அவல நிலை… பெரிதும் சிரமப்படும் பொதுமக்கள் …!!!!

குன்றி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிதண்ணீருக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், டி. என் பாளையம் அடுத்துள்ள கடம்பூர் அருகில் குன்றி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கோம்பைத்தொட்டி, மாகாளிதொட்டி, கோவிலூர், நாயகன் தொட்டி, அணில்நத்தம், கோம்பையூர், ஆனந்த்நகர், கிளை மன்ஸ்தொட்டி குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர் உட்பட 10-க்கும் அதிகமான ஊர்கள் இருக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு கிணற்று தொட்டி, பெரிய குன்றி, மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொது குழாய் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன் ஆழ்குழாய் மோட்டார் பழுதாகியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, ஆழ்குழாய் மோட்டார் பழுதாகியதால் கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் பிடிக்க முடியவில்லை. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கிணற்றில் தண்ணீர் எடுத்து வருகின்றோம். இதனால் எங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கின்றது. எனவே பழுதான ஆழ்குழாய் மோட்டாரை சரி செய்து எங்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |