Categories
ஆட்டோ மொபைல்

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்…. 131 கி.மீ பயணம் செய்யலாம்…. ஓலாவின் புதிய ஸ்கூட்டர்….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலானோர் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது புதிய மாடல்களான S1 மற்றும் S1 Pro- வை சந்தைப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் போய் இரண்டு மென்பொருளுடன் இயங்கும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய ரக ஸ்கூட்டர்களை பிரத்யேக இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |