தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2a அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு இன்று நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 , குரூப்-2 ஏ தேர்வில் “யூனியன் பிரதேசங்களின்”என்ற வார்த்தையின் மொழிபெயர்ப்பாக “ஒன்றிய பிரதேசங்களின்”என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முந்தைய தேர்வுகளில் தமிழில் யூனியன் பிரதேசம் என்று குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு என பேசப்பட்டு வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்விலும் ஒன்றியம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Categories