தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வரும் 19 வயது இளம் பெண்ணிற்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்று மாந்திரீகவாதியிடம் அழைத்துச் சென்று பேய் ஒட்டும் படி இளம் பெண்ணின் பெற்றோரிடம் உறவினர்கள் கூறினர். இந்நிலையில் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மாந்திரீகம் செய்யும் ஒரு நபரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அந்த மாந்திரீகவாதி உங்கள் பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளது என்றும் அதை ஓட்டவும், இளம்பெண் குணமடையும் தீக்குளியில் இறங்குதல் உள்ளிட்ட சில பூஜைகளை செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
அந்த மாந்திரீகவாதியின் பேச்சைக் கேட்ட இளம் பெண்ணின் பெற்றோர் பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதன் படி நிலக்கரியால் எறியப்பட்ட தீக்குழியில் அந்த இளம்பெண்ணை நடக்க வைத்துள்ளனர். அப்போது நெருப்பு கனலின் வெப்பத்தால் அந்த இளம்பெண் மயக்கமடைந்து தீக்குழியில் விழுந்துள்ளார். இருப்பினும் அந்த மாந்திரீகவாதி இளம் பெண்ணை மீண்டும் எழுந்து நிற்க வைத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் அந்த இளம்பெண்ணின் உடல் முழுவது தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாந்திரீகவாதி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.