Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா வைரஸ் பாதிப்பு” ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டு….. தமிழக சுகாதாரத்துறை அதிரடி…!!

சீனாவை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா  வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் சென்னை ராஜீவ் காந்தி  அரசு மருத்துவமணியில் அதற்கென தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இதற்காக சீன அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் கொரோனா  வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால்,

இந்திய சுகாதாரத் துறையும் தமிழக சுகாதாரத் துறையும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுபவர்களுக்கு என தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் ஒரு அறையில் ஒரு நோயாளி மட்டும்தான் இருக்கும்படி தனித்தனி அறைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இதில் பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் இருக்கின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகளும் கையில் உள்ளன. மேலும் இந்த வார்டுகளில் 10 டாக்டர்கள் 19 செவிலியர்கள் முப்பது உதவியாளர்கள் உள்ளிட்டோர் பணிபுரிய தயாராக நிலையில் உள்ளதாகவும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அவர் விரிவாக கூறுகையில், அனைத்து மருத்துவ வசதிகளும் தயாராக உள்ளன. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் 600 முக கவசங்களும், 6000 மூன்றடுக்கு கவசங்களும், கைகளை தொடர்ந்து சுத்தப்படுத்தும் 300 கிருமிநாசினி சோப்புகளும் தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |