கிணற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பரிதாபமாக இறந்து விட்டான்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் அருகே இருக்கும் பெரியார் நகரைச் சேர்ந்த ஜெகதீசன், கல்யாணி தம்பதியின் மகன் 15 வயதுடைய பூவரசன். இவரின் தந்தை இறந்துவிட்டார். பூவரசன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளார். கிணற்றில் இறங்கி படியில் அமர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த பூவரசன் நீச்சல் தெரியாததால் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்து விட்டான்.
இதையடுத்து அங்கு சென்றவர்கள் இதுபற்றி அறிந்து மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பூவரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுபற்றி பூவரசனின் தாய் கல்யாணி புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.