ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள திரைப்படத்தின் பெயரை சொன்ன உதயநிதி ஸ்டாலின் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இடையில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் டாக்டர் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து சென்ற வாரம் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான டான் திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்து வருகின்றது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தில் சாய்பல்லவி ஹீரோயினாக நடிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. படத்திற்கு மாவீரன் என தலைப்பு வைக்கப்பட்டு சஸ்பென்சாக வைத்திருந்தநிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடந்த பேட்டியில் கூறி உள்ளதால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். மேலும் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.