ஏகே 62 திரைப்படத்தின் ஸ்கிரிப்டை பார்த்த அஜித் சில மாற்றங்களை செய்யுமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அஜித். இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் சென்ற பிப்ரவரி மாதம் வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. பல கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படத்தை அடுத்து ஏகே 61 திரைப்படத்தில் அஜீத், வினோத், போனிகபூர் கூட்டணி மீண்டும் 3-வது இணைகின்றார்கள்.
இத்திரைப்படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மேலும் படப்பிடிப்பானது இந்த வருடத்தின் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்து விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். அதை பார்த்த அஜித் அதிக அரசியல் வசனங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து விக்னேஷ் சிவனிடம் இதெல்லாம் நமக்கு சரியா வராது எனக்கூறி கதையில் சில மாற்றங்கள் செய்யுமாறு கூறியதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.