Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாரதிராஜா படத்திற்கு பாடல் எழுதும் போது கண்ணீர் சிந்தினேன்”…. வைரமுத்து உருக்கத்துடன் ட்விட்…!!!!

பாரதிராஜா நடிக்கும் படத்தின் பாடலை எழுதும் பொழுது கண்ணீர் சிந்தியதாக வைரமுத்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியராக வலம் வருகின்றார் வைரமுத்து. இவர் நாட்படு தேறல் பருவங்களின் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். மேலும் இவர் இணையதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். எது பற்றிக் கூறினாலும் தனது அழகு தமிழால் இணையத்தில் பதிவிட்டு வருகின்றார். இயக்குனர் தங்கர்பச்சன் இயக்குகின்ற கருமேகங்கள் ஏன் கலைகின்றன என்ற திரைப்படத்தில் பாரதிராஜா நடித்து வருகின்ற நிலையில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதி வருகின்றார்.

vairamuthu

இந்நிலையில் இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் பாடல் எழுதிய போது தான் கண்ணீர் சிந்தியதை கூறியுள்ளார். இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களின் இந்த பதிவை படித்தவுடன் என் கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிகிறது. இந்த நூற்றாண்டில் நமது தமிழ் மொழியின் பெருமை மிக கவிஞர் நீங்கள். உங்கள் எழுத்துக்கள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் எழுதுங்கள். நாங்கள் உங்கள் வரிகளில் காதலர்கள் என உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

vairamuthu

Categories

Tech |