5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று வெறும் மூன்று ஆசிரியர்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ப.வில்லியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 150 குழந்தைகளின் கல்வி ஆதாரம் இந்த பள்ளிதான் கடந்த 18 மாதங்களாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுடன் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்துவதாக தெரிகிறது. ஆசிரியர் இல்லாததால் ஒன்றில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர் கிராம மக்கள். அ, ஆ, சொல்லித் தரவே ஆளில்லாத பொழுது மாணவர்கள் எப்படி பொதுத்தேர்வை எழுதுவார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.