தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் சிரமத்தை போக்க ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் விரைவில் அரிசி,சர்க்கரை மற்றும் பருப்பு ஆகியவற்றை பாக்கெட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஒரே ஆண்டில் இரண்டு லட்சம் போலி குடும்ப அட்டைகள் மற்றும் 12 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ரேஷன் கடைகளில் பாக்கெட்டில் பொருட்களை விடியோ கம் செய்வதன் மூலம் மக்கள் நீண்ட வரிசையில் நின்று காத்து இருக்கக் கூடிய சிரமம் குறையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.