Categories
உலக செய்திகள்

BIG ALERT: வேகமாக பரவும் குரங்கு அம்மை நோய் தொற்று…. WHO கடும் எச்சரிக்கை….!!!!

ஐரோப்பிய நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகின்ற குரங்கை அம்மை நோய் தோற்று சின்ன அம்மை போலவே இருந்தாலும் பாதிப்பு மிகக் குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியது. அதில் அமெரிக்கா,ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் கிட்டத்தட்ட 80 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பை உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இருந்தாலும் இந்த பாதிப்பு எண்ணிக்கை இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றும், இந்த தொற்று பாதிப்பு வேகமாகப் பரவக் கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவத் கூடியதாக கருதப்படுகிறது. முதலில் ஆப்பிரிக்காவில் மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இந்த நோய் பரவி வந்தது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் தற்போது பரவிக்கொண்டு இருக்கிறது என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |