Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அலர்ட்…. அனைத்து மாநிலங்களுக்கும் திடீர் எச்சரிக்கை…. மத்திய அரசு அதிரடி….!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்டது. அதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் எந்த ஒரு நிலைமையிலும் தடுப்பூசிகளை வீணாக்கக் கூடாது.

நாடு முழுவதும் ஒரு இயக்கம் போல கொரோனா தடுப்பு ஊசி போடும் பணியை நடத்த வேண்டும். வருகின்ற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீடுதோறும் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள்,சிறைகள் மற்றும் செங்கல் சூளைகள் என அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் தனியார் தடுப்பூசி மையங்களில் 18 முதல் 59 வயதுவரை மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |