Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

துர்நாற்றம்…. தொற்றுநோய்…. குப்பை கொட்டக்கூடாது…. மூக்கில் கருப்புத்துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்…!!

செங்கல்பட்டில் மக்கள்  வசிக்கும் பகுதிகளிடையே குப்பைகளை கொட்டக்கூடாது என பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்  நடத்தினர். 

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் திடக்கழிவு மேலாண்மை மையம் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொட்டப்பட்டு பின் தரம் பிரிக்கப் படுகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாகவே அதிகப்படியான குப்பைகள் கொட்டப்பட்டதாலும்,  அதனை தரம் பிரிப்பதற்கு தாமதமாவதாலும் 18-வது வார்டு பகுதியை சுற்றிலும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திடக்கழிவு மேலாண்மை மையத்தை முற்றுகையிட்டு வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடுமாறு கருப்புத் துணியை கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் இதுகுறித்து மக்கள் கூறுகையில்,

இங்கே அதிக அளவு குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதோடு அதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதாகவும் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்த அவர்கள், இனி இங்கே குப்பைகள் கொட்ட கூடாது மாவட்ட நிர்வாகம் வேறு மாற்று இடத்தை தேடி குப்பைகளை கொட்ட பேரூராட்சிக்கு இடம் ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |