Categories
தேசிய செய்திகள்

அடடே…! கைப்பையும் சைவத்தில் வந்தாச்சி…. பெண்களுக்கு குட் நியூஸ்…!!!!

சாதாரணமாக பெண்களின் லெதர் கைப்பை, அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் பைகள், லேப்டாப் பை போன்றவை பிராணிகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பிராணிகளின் வதைகளை தடுக்க இப்போது இதுபோன்ற பைகளை ஏன் செயற்கை தோலில் (வேகன் லெதர்) தயாரிக்ககூடாது என்ற எண்ணம் தற்போது பரவலாகவுள்ளது. வேகன் லெதர் என்பது பெரும்பாலும் பாலிவினைல் குளோரைடு(PVC) மற்றும் பாலியூரிதீன் எனும் பாலிமரிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது எந்த ஒரு வடிவமைப்பாளரின் விருப்பத்திற்கும் ஏற்ற அடிப்படையில் பைகள் தயாரிக்க உதவும் ஒருபாலிமர் ஆகும். அன்னாசி இலைகள், கார்க், ஆப்பிள் தோல்கள், கற்றாழை, மற்ற பழ கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியன புதுமையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது உலகத்திற்கு மற்றும் விலங்குகளுக்கு நல்லதாகும். பெரிய ஜாக்கெட் முதல் சரியான சிறு கறுப்பு உடை வரை இவற்றில் உருவாக்க முடியும்.

இதை தவிர்த்து தோல் காலணி, பூட்ஸ், கைப்பைகள், பெல்ட், வாலட் மற்றும் வீடு, கார் இருக்கை கவர்கள் போன்றவற்றையும் பலர் தயாரிக்கின்றனர். சிறிது அதிகமாக செலவழிக்க நினைத்தால் உங்களது விலையுயர்ந்த கார்களுக்கு செயற்கைதோல் இருக்கைகளை போட்டு அழகு பார்க்கலாம். செயற்கைதோல் உங்களை அழகாக்குவது மட்டுமின்றி, அது கொடுமையற்றது என்பதால் அது நம் மனதிற்கு நிம்மதியளிக்கிறது. ஒரு பில்லியனுக்கும் அதிகமான பசுக்கள், பன்றிகள், ஆடுகள், செம்மறி ஆடுகள், முதலைகள், தீக்கோழிகள், கங்காருக்கள், நாய்கள் மற்றும் பூனைகள் கூட வருடந்தோறும் தோலுக்காக கொலை செய்யப்படுகிறது. இதற்கு நேர்மாறாக செயற்கைத்தோல் எந்த கொலையும் இன்றி உங்களுக்கு உபயோகமான பொருட்களுக்கு அதே அழகை அளிக்கிறது என்பதுதான் முக்கியமானது ஆகும். செயற்கைதோல் பிளாஸ்டிக் பூச்சுடன் தயாரிக்கப்படுவதால், அது முன்பே நீர்ப்புகாத வண்ணம் இருக்கிறது.

இதை லேசான சோப் பயன்படுத்தி தூய்மை செய்யலாம். இவ்வகை செயற்கை தோல்களை “சைவத் தோல்” எனவும் அழைக்கிறார்கள். பிராணிகள் வதைகளை தடுப்பதை மட்டுமே ஒரு எண்ணமாக கொண்ட ஜுக் என்ற “ஸ்டார்ட் அப்” நிறுவனம், செயற்கை தோலிலிருந்து லேப்டாப் பேக், ஷோல்டர் பேக் மற்றும் பெண்களின் கைப்பைகள், மணிபர்ஸ், அலுவலகத்திற்கு எடுத்துசெல்லும் பைகள் போன்றவற்றை தயாரிக்கிறது. அத்துடன் இவர்களின் தயாரிப்புகளின் மீது இந்தியாவின் கலைகளை பிரதிபலிக்கக்கூடிய டிசைன்களை அச்சிடுகின்றனர். ஆகவே இது அழகிற்கு அழகு சேர்கிறது. இவர்கள் தங்களது தயாரிப்புகளை நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்கின்றனர். அதற்கான இணையதளம் www.zouk.co.in. மேலும் சந்தேகங்களுக்கு இ -மெயில் [email protected], இணையதளம்:[email protected], மொபைல் போன் எண்: 98204 51259.- போன்ற ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்..

Categories

Tech |