Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய்…. இந்தியாவை பாராட்டும் இம்ரான் கான்…!!!

இந்தியா, ரஷ்ய நாட்டிடம் மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பாராட்டியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா சமீப மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கப்பட்டதிலிருந்து பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசும், மிக குறைவான விலையில் ரஷ்ய நாட்டிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது.

எனினும் இதனை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அரசு எதிர்த்தும் இந்தியா, கச்சா எண்ணெய்யை வாங்கி கொண்டிருப்பதற்கு பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியிருக்கிறார்.

அவர், தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, குவாட் அமைப்பில் உறுப்பினராக இருந்த சமயத்திலும், தங்கள் நாட்டு மக்களுக்காக அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை எதிர்த்து ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியா குறைவான விலையில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது.

இவ்வாறு தான் தனிப்பட்ட வெளியுறவு கொள்கை மூலமாக என் தலைமையிலான நிர்வாகமும் செயல்படுத்துவதற்கு முயன்றது. ஆனால், தற்போது இருக்கும் பாகிஸ்தான் அரசாங்கம் பிற நாடுகள் அழுத்தம் கொடுப்பதால், கட்டுப்பாடில்லாத பொருளாதார சிக்கல் காரணமாக தலையில்லாத கோழி போன்று சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |