நாடு முழுவதும் விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 11-வது தவணை மே 31-ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு உள்ளது. ஆனால் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் சில விவசாயிகளின் தவணைப் பணம் வராமல் போய்விடுகிறது.
Pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் அவற்றில் பல விண்ணப்பங்கள் தற்போது நிலுவையில் உள்ளது. ஏனென்றால் அதில் பல தவறுகள் உள்ளன. அதனால் இந்த விவசாயிகளின் தவணைப் பணம் நிறுத்தப்படுகிறது. அதாவது வங்கி விவரங்கள் முதல் பெயர் மற்றும் ஆதார் வரை பல்வேறு பிழைகள் அந்த விண்ணப்பங்களில் உள்ளன. இதுபோன்ற சூழலில் விவசாயிகளுக்கு பணம் வராது. எனவே இதில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்.