ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடித்த பாடகர்களில் ஒருவரான சங்கீதா சஜித் (46) உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். தமிழில் மெகா ஹிட் பாடலான மிஸ்டர் ரோமியோ படத்தில் “தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை”என்ற பாடலை இவர்தான் பாடியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் ஃபேவரட் சிங்கர் ஆன இவர் மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரது மறைவிற்கு திரை உலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories