Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான்.. அதிலும் கஸ்தூரி மஞ்சளின் மகிமை மிகவும் சிறப்பு..!!

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான் அதிலும் கஸ்தூரி மஞ்சளின் சிறப்பு மிகவும் அரிது..

கஸ்தூரி மஞ்சள் அதிகம் மனம் வீசக்கூடியதாகும். நம் உடலில் உள்ள தோல் நோய்களைப் நீக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது. பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள் இல்லாமல் போய்விடும், உடலில் இருக்கும் தேமல்கள் கூட மறைந்து விடும். 

கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி வெள்ளை துணியில் சலித்து எடுத்து கொள்ள வேண்டும். குன்ம நோய் சரியாக கஸ்தூரி மஞ்சளை தேனில் கலந்து சாப்பிட்டால் சரி ஆகிவிடும். வயிற்று வலிக்கும் இது சிறந்த மருந்து.

பெண்களுக்கு கஸ்தூரி மஞ்சள் மிகவும் சிறப்பு, கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடியாக்கி  உடல் முழுவதும் பூசி, கொஞ்ச  நேரம் பிறகு  குளித்தால் தோல் நோய்கள் அனைத்தும் போய்விடும. கரப்பான் புண்கள் எளிதில் குணமாகிவிடும்.

கஸ்தூரி மஞ்சள் மற்றும் பூலாங்கிழங்கையும் சமஅளவாக எடுத்து அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று பளபளப்பாக மாறிவிடும். இதனை தினமும் செய்து வந்தால் முகத்தில் அழகு மெருகூட்டும்.

கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் ஆன பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக்.

கஸ்தூரி மஞ்சள் மிகவும் சிறந்த அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இயற்கை சீர்குலைவால் சருமத்தில் ஏற்படும் பருக்கள், தோல் நோய், கிருமி நாசினிகள், தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளிடமிருந்து சருமத்தை பாதுகாத்து உதவி செய்கிறது.

இயற்கையாக அழகு கொண்டு வரலாம், கஸ்தூரி மஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை எல்லாத்தையும் கலந்து முகத்தில் பூசி  20 நிமிடம் கழித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இவ்வாறு தினமு கோடா செய்து வரலாம் அல்லது வராது 4 முறை கோடா செய்து வரலாம்.

முகத்தில் பருக்கள் மற்றும் கட்டிகளால் உண்டாகும் தழும்புகள் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அந்த தழும்புகளை கஸ்தூரி மஞ்சள் குறைத்து விடும்.  தொடர்ச்சியாக இந்த மஞ்சளை பயன்படுத்துவதால் இந்த தழும்புகள் மறைந்து விடும்.

Categories

Tech |