Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கட்டி வைத்து வாயில் விஷத்தை ஊற்றிய கணவன்…. கூச்சலிட்ட இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

மனைவியின் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிறுதலைக்காடு மேல தெருவில் குமார்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனபாக்கியம்(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குமார் தனபாக்கியத்தின் நடத்தை மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது குமார் தனபாக்கியத்தின் கையை பின் பக்கத்தில் வைத்து கட்டியுள்ளார்.

இதனை அடுத்து குமார் தண்ணீரில் விஷம் கலந்து அதனை தன பாக்கியத்தின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது. அப்போது தனபாக்கியம் கத்தி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தனபாக்கியம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |