Categories
உலக செய்திகள்

இந்திய வெளியுறவு அதிகாரிகள் ஆணவமுடையவர்கள்…. ஐரோப்பிய அதிகாரிகள் கருத்து…!!!

ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியாவை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகள் யார் கருத்தையும் கேட்க மாட்டார்கள் என்று தெரிவித்ததாக ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

லண்டனில், ‘இந்திய நாட்டிற்கான திட்டங்கள்’ என்னும் தலைப்பில் நேற்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி பேசியதாவது, நான் ஐரோப்பிய அதிகாரிகள் சிலரிடம் பேசியுள்ளேன்.

இந்திய வெளியுறவுத்துறை முற்றிலுமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆணவமாக இருக்கிறார்கள். யார் கூறுவதையும் கேட்காமல் இருக்கிறார்கள். அவர்கள், இந்திய அரசாங்கத்திடமிருந்து என்ன அறிவிப்பு வருகிறதோ, அதை எங்களிடம் கூறுகின்றனர். எங்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். நீங்கள் இப்படி இருக்க கூடாது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |