Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்”…. ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு… தனுஷின் அதிரடி முடிவு…!!!!!!!

மதுரையைச் சேர்ந்தவர்கள்  கதிரேசன் மீனாட்சி தம்பதியினர். இவர்கள் நடிகர் தனுஷ் தங்கள் மகன் எனக்கூறி மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். மேலும் ஊடகங்களிலும் தனுஷ் எங்களது மகன் என பேட்டி அளித்து இருந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில் அவர்களை கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சி செய்ததாகவும், கோர்ட்டில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளதாகவும் குற்றசாட்டுகளை கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுஷுக்கும், கஸ்தூரிராஜாவிற்கும்  நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு  மன்னிப்பு கேட்க தவறினால் 10 கோடி ரூபாய் ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் காஜா  மொய்தீன் கிஸ்தி நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றார்.

Categories

Tech |