Categories
மாநில செய்திகள்

தக்காளி விலை கிடுகிடு உயர்வு…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சல் குறைந்து, பல்வேறு இடங்களில்  விலை  உயர்ந்து காணப்படுகிறது.  கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.120 க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளனர். இதனிடையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பருவமழை காரணமாக தக்காளி விலை வெளிச்சந்தையில் உயர்ந்துள்ளது.

இதனால் மக்களுக்கு மலிவு விலையில் தரமான தக்காளி கிடைக்க தமிழக அரசு கூட்டுறவு துறையின் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. தக்காளி ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.120 வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு துறை நடத்திவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் முதல்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 4 மெட்ரிக் டன் அளவிற்கு தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு ஒரு கிலோ ரூ.70முதல் ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து சந்தை விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை நடத்தி வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும். மேலும் தேவையின் அடிப்படையில் நியாய விலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே மக்கள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தரமான தக்காளி மற்றும் காய்கறி விலை மலிவான விலையில் வாங்கி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |