குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள உச்சிமேடு கிராமத்தில் அறிவழகன்-பரமேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து பத்து மாதம் ஆன கிஷ்வந்த் என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் அறிவழகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து பரமேஸ்வரி கடந்த 19-ஆம் தேதி தனது தாய் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிஷ்வந்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வீட்டில் வைத்திருந்த தின்னரை கிஷ்வந்த் குடித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிஷ்வந்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிஷ்வந்த் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.