அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடகொரிய நாட்டிற்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தற்போது வட கொரியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க அரசு வடகொரிய நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறது. எனினும் தற்போது வரை இதற்கு வட கொரியா எந்த பதிலும் அளிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதி இது பற்றி தெரிவித்ததாவது, வடகொரிய நாட்டிற்கு மட்டுமல்லாமல் சீனாவிற்கும் தடுப்பூசிகளை உடனே கொடுக்க தயாராக உள்ளோம். எனினும் இதற்கு தகுந்த பதில் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.