அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் கடந்த 2 நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு திற்பரப்பு அறிவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் படகு சவாரி செய்யவும் பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளது. மேலும் அருவிக்கு அருகில் செல்லாமல் இருக்க கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.