மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் செல்போனை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவி குடியாத்தம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வேலூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பொய்கை அருகில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் ரவியை மடக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதுகுறித்து ரவி விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செல்போனை பறித்து சென்றது மோட்டூர் பகுதியில் வசிக்கும் அப்பு என்ற வரதராஜ் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பு என்ற வரதராஜை கைது செய்துள்ளனர்.