Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு… 11 ம்வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. தீவிர தேடலில் போலீசார்…!!!!!!!

மேல்மலையனூர் அருகே 11 ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம்  மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த பழம்பூண்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பதினோராம் வகுப்பு பயின்று வரும் மாணவி ஒருவரை ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில் மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவியின் தாய் செஞ்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த விசாரணையில் பழம் பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 27) மற்றும் சிறுதலை பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வாசு (வயது 26) போன்ற இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது தலைமறைவாக இருக்கும் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் எட்டு மாதம் கர்ப்பமாக உள்ள பள்ளி மாணவியை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து அதனை தொடர்ந்து விழுப்புரம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு காப்பகத்தில் சேர்த்திருக்கின்றனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Categories

Tech |