மனிதர்களின் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு ஒரு ஆராய்ச்சியாளர் முயற்சி செய்துள்ளார். அதாவது ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹெனிக் பிராண்ட் என்ற ஆராய்ச்சியாளர் மனிதர்களின் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுப்பதற்காக கடந்த 1669-ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் அருகில் 5700 லிட்டர் சிறுநீரை ஒரு டேங்கில் சேகரித்து வைத்துள்ளார். இவர் அந்த சிறு நீரை நன்றாக கொதிக்க வைத்துள்ளார். அந்த சிறுநீர் முழுவதுமாக கொதித்தவுடன் பேஸ்ட் மாதிரி கிடைத்துள்ளது. இந்த பேஸ்ட்டை ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு நன்றாக மூடி வைத்துள்ளார்.
அந்த கண்ணாடி பாட்டிலை கொதிக்க வைத்த போது ஒரு கண்ணாடி போன்ற ஜொலிக்கும் பொருள் கிடைத்துள்ளது. அந்த ஜொலிக்கும் பொருளை வைத்து தங்கத்தை உருவாக்கலாம் என அந்த அறிவியலாளர் நினைத்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய கண்டுபிடிப்பை பற்றி கடந்த 1680-ம் வெளி உலகத்திற்கு கூறியுள்ளார். அதன்பிறகு அவர் கண்டுபிடித்த ஜொலிக்கும் பொருளை ஆராய்ச்சி செய்ததில் அது பாஸ்பரஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஹெனிக் பிராண்ட்டால் தங்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும் பாஸ்பரஸ் என்ற உலோகத்தை எதிர்பாராதவிதமாக கண்டுபிடித்துள்ளார்.