Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அட கஞ்ச பயலுகளா…. ரூ2000 க்கு ஆசைபட்டதால் விபரீதம்…. நாகை அருகே 3 வாலிபர்கள் கைது…!!

நகையில் விவசாயிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசித்து வருபவர் நாகலிங்கம். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் திருத்துறைபூண்டி இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் வேதாரண்யத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாருமடை கடை வீதி அருகே நின்று கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று நாகலிங்கத்தை வழி மறைத்து  தகாத வார்த்தைகளில் திட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை பறித்து சென்றனர். இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள்,

அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துச் சென்ற வேதாரண்யத்தை சேர்ந்த செல்வராஜ் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த முத்து, மோரிஸ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் வழக்கில் தொடர்புடைய சாம்ராஜ் என்பவரை காவல்துறையினர்  வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |