உக்கிரேன் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்த தமிழர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாவரம் பகுதியில் கோவிந்தராஜன்- மேரி மார்க்ரெட் டயஸ் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டோனி கோவிந்தராஜன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜன் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த பிரான்ஸ் நாட்டு மாணவி கரோலின் என்பவரை காதலித்து கடந்த 2013- ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வசித்து வருகின்றனர். தற்போது கோவிந்தராஜன் மதுரையில் உள்ள தனது அத்தை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவிந்தராஜன் நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நான் பிரெஞ்சு மொழியில் ஏற்பட்ட ஆர்வத்தால் பிரெஞ்சு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். தற்போது ரஷ்யா உக்ரைன் போரால் நாட்டு மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேற தொடங்கினர். இதற்காக பிரெஞ்சு நாட்டில் அமைக்கப்பட்ட போலந்து அகதிகள் முகாமிற்கு நான் சென்றேன். இந்த முகாம் உக்ரைன் எல்லை பகுதியின் அருகே அமைந்துள்ள ஒரு பெரிய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டது.இந்த முகாமிற்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டும் தான் வருவார்கள்.
இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் போர் செய்வதற்காக சென்றுவிட்டனர். நான் இந்த முகாமில் வரும் அகதிகளுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியில் ஈடுபட்டேன். மேலும் போலந்து அரசு பணியாளர்கள் இந்த முகாமிற்கு வந்ததால் மார்ச் மாதம் வரைதான் நான் அங்கு பணி செய்தேன். மேலும் ஐரோப்பிய நாட்டில் உள்ள அனைத்து நாடுகளும் உக்ரைன் மக்களுக்கு தற்காலிக குடியுரிமை வழங்கியுள்ளது. இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டு உறவுகளை இழந்த மக்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு நான் செய்த சேவை எனக்கு கிடைத்த பாக்கியம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.