Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அன்னதானம் கொடுப்பதில் தகராறு…. மூதாட்டியை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியை தாக்கி குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சடையப்பர் தெற்கு மடவிளாகம் பகுதியில் பக்கிரிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனஜா(61) என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சடையப்பர் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. இதில் வனஜாவும் சன்னதி தெருவில் வசிக்கும் பரமானந்தம் என்பவரும் உணவு விநியோகம் செய்தனர். இந்நிலையில் அன்னதானம் முடிந்து மீதி இருக்கும் உணவை தனக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுப்பது குறித்து வனஜா பரமானந்ததிடம் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த பரமானந்தம் வனஜாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து வனஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமானந்தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |