நிலத்தகராறில் தந்தை-மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆண்டியகவுண்டனூர் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிமுத்து, துரைசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 4-ந்தேதி காளிமுத்து தனது விளை நிலத்தில் டிராக்டர் ஓட்டி வந்த துரைசாமியின் மகன் சிவராமனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து காளிமுத்து, அவரது மனைவி கமலாத்தாள், மகன் பழனிச்சாமி ஆகியோர் துரைசாமியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து துரைசாமி கொமரலிங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்து மற்றும் அவரது மகன் பழனிச்சாமி ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.