Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நன்மை சேரும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டினால் உங்களுக்கு நன்மை சேரும்.

இன்று காலையிலேயே நீங்கள் உங்கள் குலதெய்வத்தை வழிபட்டு மகிழ்வீர்கள். திடீர் பயணத்தால் உங்களுக்குத் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிட்டும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று உங்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும். வீடு மனை மற்றும் வாகன விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் பேச்சு திறமையால் அதிக சாதனை படைப்பீர்கள். வெளியூர் பயணங்களை மட்டும் நீங்கள் பயன் அறிந்து மேற்கொள்ள வேண்டும்.

அவசரம் அவசரமாக எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். நீங்கள் அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. என்றோ ஒரு நாள் செய்த வேலைக்கு இப்பொழுது பாராட்டுகள் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த ஒரு குறையும் இல்லை.
விருந்தினர்களின் வருகையால் உங்களுக்கு சில செலவுகள் அதிகரிக்கும்.
திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். இன்று உங்களுக்கு தெய்வீக சிந்தனை அதிகமாகவே உள்ளது. முடிந்தால் ஆலயம் சென்று வழிபடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினை இல்லாத சூழலை இன்று நிலவும்.
காதலில் உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும். காதல் சிக்கல்களுக்கு பிறகு கைகூடும். மாணவ மாணவியர்கள் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். விடுமுறை நாட்களாக இருந்தாலும் உங்கள் விடா முயற்சியை கைவிட வேண்டாம். படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்வதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. உங்கள் அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் கரும் நீல நிறம்.

Categories

Tech |