கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் கவனமுடன் செயல் படும் நாளாகவே இருக்கிறது.
தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் தேவை. இன்று நீங்கள் பயணங்களில் சில மாற்றங்களும் செய்ய நேரிடும். இன்று உங்களுக்கு கோபம் அதிகரிக்கும் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. நிதானமாகப் பேசிப் பழகுவது மிகவும் சிறந்தது. யாரைப் பற்றியும் தவறான எண்ணங்கள் உங்களுக்கு கண்டிப்பாக தேவை இல்லை. நீங்கள் யாரையும் சந்தேக நோக்கில் பார்க்கவேண்டாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள்.
உங்களுக்கு எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் நீங்கள் அதை சுமுகமாக சமாளித்து விடுவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப்போடாமல் உடனே முடிவு எடுப்பது மிகவும். நீங்கள் இன்று தெளிவான சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் செய்யும் முன் ஆலோசனை செய்து பின் அதில் வெற்றி காண்பீர்கள்.
வியாபாரிகள் எந்த ஒரு கொள்முதலும் தயக்கமின்றி செய்யலாம். இன்று ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.
நீங்களும் முடிந்தால் ஆலயம் சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது.யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.காரம் மற்றும் எரிபான உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. இன்று உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். இன்று கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது. நீங்கள் உங்கள் பெரியோர்களை மதித்து நடப்பது மிகவும் சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை அவசியம் ஆகும். அவசரப்பட்டு எந்த ஒரு வார்த்தையும் விட்டுவிட வேண்டாம். மாணவக் கண்மணிகள் சக மாணவர்களிடம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நட்பு உணர்ச்சியுடன் பழகுவது மிகவும் சிறந்தது. விடுமுறை நாட்களாக இருந்தாலும் நீங்கள் படிப்பதில் கவனம் சிதற விடாதீர்கள். படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமானதிசை தென்கிழக்கு அதிர்ஷ்டமான எண் 7 மற்றும் 8. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.