Categories
மாநில செய்திகள்

கோவில் வாட்டர் பாட்டிலில் பல்லி….. அதிர்ச்சியடைந்த சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள்….!!!!!

தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியில் பழனிசாமி மற்றும் ராஜலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தனது மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு சமயபுரம் சென்றுள்ளனர். பழனிசாமி நேற்று காலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மொட்டையடித்த நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்துள்ளார். அதன் பிறகு மொட்டை அடித்து விட்டு மாரியம்மனை தரிசிப்பதற்காக பொது தரிசனத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அச்சமயம் அவரின் பேத்தி,தாத்தாவிடம் தாகமாக இருக்கிறது தண்ணீர் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் விற்றுக்கொண்டிருந்த ஆசை பெயர் கொண்ட தண்ணீர் பாட்டிலை பழனிசாமி வாங்கி கொடுத்துள்ளார். அதில் மூடியைத் திறந்து பார்த்தபோது பல்லி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பிறகு இதுகுறித்து அந்த தண்ணீர் பாட்டில் கொடுத்த வாலிபரிடம் கேட்டபோது அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பல்லி கிடந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு பழனிசாமி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு அறிவுறுத்தியதால் தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வழக்கு தொடர பழனிசாமி சென்றார். மேலும் கவனிக்காமல் தண்ணீரை குடித்து இருந்தால் உயிர்பலி ஏற்பட்டு இருக்குமோ என கோவிலுக்கு வரும் பக்தர்கள் அஞ்சுகின்றனர்.

இதுபோன்ற தரமில்லாத நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதுபோன்ற தவறுகள் இனி வரும் நாட்களில் நடக்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |