பாஜக நட்சத்திர பரப்புரையாளர் பட்டியலில் இருந்து நட்சத்திர பேச்சாளர் அனுராக் தாகூர் மற்றும் பர்வேஷ் சர்மா நீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் ரிதாலா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மணிஷ் சவுத்ரிக்கு ஆதரவு தெரிவித்து, நிதித்துறை இணை அமைச்சரும், நட்சத்திர பேச்சாளருமான அனுராக் தாக்கூர் சிலநாட்களுக்கு முன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் வன்முறையை தூண்டுகின்றனர் என்று கடுமையாக தாக்கிப்பேசினார். மேலும் தேசதுரோகிகளையெல்லாம் சுட்டுத்தள்ள வேண்டும் எனமுழக்கமிட்டார்.
அதேபோல பா.ஜ.க எம்.பி. பர்வேஷ் வர்மா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஷாஹீன் பாக் மக்கள் உங்கள் வீட்டு மகள்கள் மற்றும் சகோதரிகளை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்வார்கள். டெல்லி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் இது. பாஜக ஆட்சிக்கு வந்தால் 11-ஆம் தேதி இரவே ஷாஹீன் பாக் இடம் காலி செய்யப்படும் எனசர்ச்சையாக பேசினார். இப்படி பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து சர்ச்சையாக பேசி வந்தநிலையில், காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் பேரில் தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தேர்தலுக்கான பா.ஜ.கவின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் இருந்து அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா ஆகியோரை உடனடியாக நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.