தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் துணை மின் நிலையத்தில் ராம்நகர் பீடர் மற்றும் ஓடக்காடு பீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட குமார் நகர், ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, இந்திரா நகர், இட் டேரி ரோடு, போஸ்டல் காலனி, அவினாசிரோடு, முருங்கப்பாளையம் மெயின் ரோடு, பார்க் அவென்யூ, புஸ்பாதியேட்டர் உள்ளிட்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
அதேபோல் காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட ஓலப்பாளையம் துணைமின் நிலையத்தில்உள்ள செட்டிபாளையம் மின்மாற்றிக்குட்பட்ட செட்டிபாளையம், கண்ணபுரம், சங்கங்காடு, காங்கயம்பாளையம், தண்ணீர்பந்தல்வலசு, ஊதியூர் துணை மின் நிலையத்தில் உள்ள பொத்தியபாளையம் மின்மாற்றிக்கு உட்பட்ட பொத்தியபாளையம், ஜெ. நகர், முத்துகாளிவலசு, துண்டுகாடு, குருக்கலிங்கம்பாளையம். முத்தூர் துணை மின் நிலையத்தில் உள்ள தொட்டிபாளையம் மின்மாற்றிக்குட்பட்ட முத்தூர், கொடுமுடி சாலை, மேட்டுக்கடை, சாலிங்காட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
மேலும் மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை அருள்புரம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட திருமலைநகர் , சீனிவாசநகர் , அல்லாலபுரம் , நொச்சிப்பாளையம், அவரப்பாளையம் பிரிவு, காளிநாதன்பாளையம் , பொன்நகர் , அகிலாண்டபுரம் நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட செவந்தாம்பாளையம் , கணபதிபாளையம் , ஆர். கே. ஜி. கார்டன் , சந்திராபுரம் , இந்திராநகர் , பட்டத்தரசியம்மன் நகர், ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளிலும், ஊத்துக்குளி துணை மின்நிலையத்திற்குட்பட்ட தேனீஸ்வரம்பாளையம், ராம்மூர்த்திநகர் , செட்டிபாளையம் , நடுத் தோட்டம், தோப்புத்தோட்டம், அய்யாமுத்தையன்காடு, கொளத் தோட்டம், கிணத்தாங்காடு, ஜே. ஜே. நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.