Categories
பல்சுவை

துப்பாக்கியில் ஏன் புகைப்படம் வைத்தார்கள்…? 2-ஆம் உலகப்போரில் நடந்த நிகழ்வு…. எதற்கு தெரியுமா…?

கேமரா உருவான பிறகு ராணுவ வீரர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை ஹெல்மெட், பாக்கெட், பைபிள் ஆகியவற்றில் வைத்திருப்பர். ஏனென்றால் அந்த புகைப்படங்களை அடிக்கடி பார்க்கும் போது தங்கள் குடும்பத்தினரின் ஞாபகம் வரும். அப்போது அவர்கள் தீவிரமாக வேலை பார்க்க தொடங்குவர். இந்நிலையில் இரண்டாம் உலக போரில் ராணுவ வீரர்கள் தங்களது ஆயுதங்களில் குடும்பத்தினரின் புகைப்படங்களை வைக்க தொடங்கினர்.

அதாவது Colt M1911 ரக துப்பாக்கிகளில் வெளிப்படையான கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும். அதில் ராணுவ வீரர்கள் தங்கள் குடும்பத்தினரின் புகைப்படத்தை வைத்திருப்பர். துப்பாக்கியில் குடும்பத்தினரின் புகைப்படத்தை வைப்பது இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் மிகவும் அதிகமாக பேசப்பட்டது. இப்படி புகைப்படத்தை பொருத்துவதை Sweetheart Grips என அழைத்தனர்.

Categories

Tech |