ஒருவர் பிஸியாக வேலை பார்த்து கொண்டிருந்ததால் தனது குழந்தை என்ன செய்கிறது என்பதை கவனிக்க மறந்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அந்த நபர் குழந்தை என்ன செய்கிறது என பார்த்துள்ளார். அப்போது அந்த குழந்தை iPad-ஐ கையில் வைத்துக்கொண்டு Unlock செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தது. அந்த குழந்தை விடாமல் Unlock செய்ய முயற்சித்ததால் கிட்டத்தட்ட 48 வருடம் அந்த நபர் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
தனது நிலைமையை அந்த நபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உதவி கேட்டுள்ளார். இதனை அடுத்து ஒருவர் Apple page link-ஐ அனுப்பி உள்ளார். அதில் iPad-ஐ ரீஸ்டார்ட் செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது . அதன்படி அந்த நபர் iPad-ஐ ரீஸ்டார்ட் செய்துள்ளார். ஆனால் Backup கொடுத்து வைக்காததால் அதிலிருந்த அனைத்தும் அழிந்துவிட்டது.